
காளிதாஸ் சுப்ரமணியம்
ரவாங் மே 23-
ஒரு மாற்றுத் திறனாளியான ரவாங் புக்கிட் புருந்தோங்கைச் சேர்ந்த திருமதி
ஈஸ்வரி பிள்ளைக்கு சிலாங்கூர் மாநில மைபிபிபி தலைவர் டாக்டர் சுரேந்திரன் மடிக்கணினியை வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
இந்த மடிக்கணினி முலம் ஆன்லைன் கல்வி கற்பித்தல், தனிநபர்கள்/நிறுவனங்களுக்கு வருமான வரி கணக்குகளை செய்து கொடுத்தல் மற்றும் பெண்கள்/இல்லத்தரசிகளுக்கு கம்ப்யூட்டர் பயன்படுத்துவதற்கான அடிப்படை அறிவை கற்பித்தல் போன்றவை மூலம் வருமானத்தை ஈட்ட பெரிதும் உதவலாம் .
அவர் ஒரு மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் தன்னாலும் உழைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார்
இந்த மடிக்கணினி முலம் தனது குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்யவும் தனது வியர்வையால் வருமானம் ஈட்டி சுதந்திரமாக இருக்கவும் இது பெரிதும் துணை புரிகிறது.
தக்க நேரத்தில் தனக்கு மடிக்கணினியை வழங்கி பேருதவி புரிந்த டாக்டர் சுரேந்திரனுக்கு திருமதி ஈஸ்வரி நன்றியை பதிவு செய்து கொண்டார்.

