இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பணி நியமனம் குறித்து நடவடிக்கை எடுக்க அவசர கோரிக்கை!

செ.வே.முத்தமிழ் மன்னன்

கோலாலம்பூர் மே 25-

கோலா
நாட்டில் உள்ள இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பான முக்கியமான பிரச்சனை குறித்து பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் இருவருக்கும் குரல் பதிவு மற்றும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்துள்ளேன் என்று தமிழ்ப் பள்ளி அரசு சாரா தலைவர்கள் இயக்கத்தின் தலைவர் மா. வெற்றிவேலன் தெரிவித்தார்.

பல தகுதி வாய்ந்த கல்வியாளர்களின் முயற்சிகள் இருந்தபோதிலும், உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய குறிப்பிடத்தக்க பற்றாக்குறையை நாங்கள் எதிர்கொள்கிறோம்.

49 ஆசிரியர்கள் சுல்தான் இட்ரிஸ் பல்கலைக் கழகத்தில் (UPSI) பட்டம் பெற்றுள்ளனர்.

ஆனால் அவர்கள் இன்னும் கல்வி அமைச்சின் (KPM) நேர்காணலுக்காக காத்திருக்கின்றனர்.

ஏறக்குறைய 25 ஆசிரியர்கள் பட்டம் பெற்று KPM நேர்காணல்களில் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் இன்று வரை வேலைவாய்ப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை.ஏறத்தாழ 100 இடைநிலைப் பள்ளிகளில் (SMK) தமிழ் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

இதற்கு ஆக்கபூர்வமான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், இந்தப் பிரச்சினையை நாங்கள் பொது ஊடகங்களில் பேசுவோம் என்று அவர் சொன்னார்.

அதிகாரத்துவ தாமதங்கள் மற்றும் தமிழ் கல்விக்கான ஆதரவின்மை காரணமாக நமது மாணவர்கள் பாதிக்கப்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது

நமது மாணவர்களின் எதிர்காலம் பேரளவில் பாதிக்கப்படுகிறது. இனியும் தாமதிக்காமல் இப்பிரச்சனைகளுக்கு உரிய அதிகாரிகள் தீர்வு காண வேண்டும். மேலும் தமிழர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு காண தமிழ் அமைச்சர் கண்டிப்பாக வேண்டும் என்று இன்று தலைநகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் குமரன் மாரிமுத்து, சுப்ரமணியம், மகேஷ் ராம், டாக்டர் ராஜகோபால், சுப்பையா ஜோன்சன் விக்டர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles