பிரதமரின் ஜப்பான் பயணம் கே.எல்-தோக்கியோ உறவுகளை வலுப்படுத்தியுள்ளது!

தோக்கியோ, மே 25:
நேற்றுடன் முடிவடைந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஜப்பானுக்கான குறுகிய காலப் பயணம் மலேசியாவிற்கும் சூரிய உதயமாகும் நாட்டிற்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஆனது.

RM1.45 பில்லியன் மதிப்புள்ள புதிய முதலீடுகளையும், ஏழு பெரிய ஜப்பானிய நிறுவனங்களிடமிருந்து மொத்தம் RM 550 மில்லியன் ஏற்றுமதி களையும் வெற்றிகரமாகப் பெற்றுள்ளது என்று பிரதமர் அன்வார் ஜப்பானுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு மலேசிய செய்தியாளர்களிடம் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருடன் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜிஸ் மற்றும் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் ஆகியோரும் உடன் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles