ஈப்போ, மே.25: இங்குள்ள புந்தோங் சட்டமன்ற தொகுதி மற்றும் ஜ செ க ஏற்பாட்டில் உயர்கல்வி கூடங்களுக்கு செல்லவிற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டி மற்றும் கண்காட்சியும் நடைபெறவுள்ளதாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துள்சி மனோகரன் கூறினார்.
இந்நிகழ்வு 26.5.2024 ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக காலை மணி 10.00 க்கு தொடக்கி வைக்கிறார் துணை கல்வி அமைச்சர் ஓங் கா ஓ. இங்குள்ள தாமான் பெர்தாமா, யூ வா சீனப்பள்ளி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மாணவர்களின் பதிவு காலை மணி 8.00 க்கு தொடங்கி விடும் என்று அவர் குறிப்பிட்டார்.
அடுத்த வாரம் வெளியாகவுள்ள எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவிற்கு காத்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இது ஒரு வழிகாட்டி நிகழ்வாக அமையும். எவ்வாறு அரசாங்க உயர்கல்வி கூடங்களுக்கு பதிவு செய்வது மற்றும் எத்தகைய பயிலரங்கத்தை தேர்வு செய்வது போன்ற தகவல்களை இங்கு பெற்றுக்கொள்ள வழிகாட்டி கருத்தரங்கு மற்றும் நேரடியாக கேட்டறிந்து தகவலை பெற்றுக்கொள்ள ஏதுவாக அமையும் என்று அவர் கருத்துரைத்தார்.
இந்த வழிக்காட்டி கருத்தரங்கில் அரசாங்க உயர்கல்வி கூடங்களின் முக்கியதுவம் மற்றும் அதன் அவசியத்தை தெரிந்துக்கொள்ளமுடியும். அத்துடன், அங்கு வழங்கப்படும் பயிற்சி அல்லது பயிலரங்கம் பற்றிய நுண்ணிய தகவல்களை கிடைக்கப்பெறலாம். அதோடு, திவெட் கல்வியும், அதன் எதிர்கால வளர்ச்சி குறித்தும் மாணவர்கள் அறிந்துக்கொள்ள வழிவகை செய்யப்படும் என்று அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், உயர்கல்வி கூடங்களான மலாயா பல்கலைக்கழகம், யுபியு, ஆசிரியர் பயிற்சி வளாகம், போலிடெக்னிக் உங்கு ஒமார், பாசாக் வாரியம், குடும்ப மேம்பாட்டு வாரியம், சொக்சோ வாரியம், போதைப்பொருள் ஒழிப்பு கழகம்( AADK), பெட்ரோனாஸ் பல்கலைக்கழகம்( UTP), உயர்கல் விகூட கடனுதவி திட்ட அமைப்பு( PTPTN) ஆகியவை மாணவர்களுக்கு உதவும் பொருட்டு தங்கள் சேவையை செய்ய முன்வந்துள்ளனர். இந்நிகழ்வின் வெற்றிகரமாக நடைபெற உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றியை அவர் தெரிவித்துக்கொண்டார்.

