அன்வார் தலைமையிலான அரசாங்கம் நிலையாக உள்ளது – முகமட் ஹாசான் பேச்சு

போர்ட்டிக்சன், மே 26-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் நிலை தன்மையாக உள்ளது என வெளியுறவு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசான் கூறினார்.

இதனை உலக நாடுகளின் தலைவர்கள் உட்பட முதலீட்டாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

அரசியல் ரீதியில் நாடு நிலையாக உள்ள காரணத்தினால் தான் அதிகமான முதலீட்டாளர்களை கவர முடிகிறது.

எனவே, அரசியல் நிலைத்தன்மையை பாதிக்கும் வகையில் எந்த தரப்பினரும் செயல்பட கூடாது.

அரசியல் விளையாட்டுகளை நிறுத்திக் கொண்டு நாட்டை மேம்படுத்தும் எண்ணம் அனைவருக்கும் இருக்க வேண்டும் என போர்ட்டிக்சன் கோரஸ் பாராடைஸ் ஹோட்டலில் நடைபெற்ற மலேசிய மக்கள் சக்தி கட்சியின் retreat 2.0 நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் உரையாற்றிய முகமட் ஹாசான் கேட்டு கொண்டார்.

தேசிய முன்னணி என்றுமே மக்கள் சக்தியை கட்சியை அங்கீகரிக்கும். தேமு வெற்றிக்கு அக்கட்சியின் ஒத்துழைப்பு பாராட்டுதலுக்குரியது.

இளைஞர் மற்றும் மகளிர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை அளித்து ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை முன்னெடுத்த கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரனின் முயற்சி வரவேற்க கூடியது என்றும் அமைச்சர் பாராட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles