
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் கெஅடிலான் தேசிய துணை செயலாளர் மற்றும் உலு சிலாங்கூர் கெஅடிலான் தொகுதி தலைவர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து தேசிய முன்னணி சார்பில் ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி மோகன் போட்டியிடுகிறார்.
இருவரும் நாட்டில் புகழ்பெற்ற தலைவர்களாக இருக்கும் வேளையில் இப்போது உலு சிலாங்கூரில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்ததுள்ளது.
டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் கடந்த மூன்று ஆண்டுகளாக உலுசிலாங்கூரில் களம் இறங்கி சேவையாற்றி வருகிறார்.
டத்தோ மோகனும் தனது ஆதரவாளர்களுடன்உலு சிலாங்கூரில் களம் இறங்கி வாக்காளர்களை சந்தித்து வருகிறார்.
நாளை வேட்புமனு தாக்கல் நடைபெறுவதால் எத்தனை பேர் இங்கு போட்டியிடுகிறார்கள் என்பது தெரிந்துவிடும்.
