
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள உலு லங்காட் நாடாளுமன்றத் தொகுதியில் அமானா கட்சி சார்பில் சானி ஹம்சான் போட்டியிடுகிறார்.
உலு லங்காட் நாடாளுமன்றத் தொகுதியை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தக்க வைக்கும் என்று உலு லங்காட் பிகேஆர் தலைவர் ராஜன் முனுசாமி தெரிவித்தார்.
முகமட் சானி தற்போது தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
உலு லங்காட் தொகுதியில் சிறந்த சேவையை ஆற்றி வரும் முகமட் சானியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இத்தொகுதியில் ஏறத்தாழ 166,000 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 17,000 இந்தியர்கள் ஆவார்.
இந்தியர்களின் ஆதரவு பக்காத்தான் ஹராப்பானுக்கு கிடைக்க முழு மூச்சுடன் நாங்கள் செயலாற்றுவோம் என்று அவர் சொன்னார்.