
உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வழக்கறிஞர் சிவராசா வுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
சிவராசா எனது நீண்ட கால நண்பரும் மூத்த அரசியல்வாதியும்
கூட.
அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதை கவனத்தில் கொண்டு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இவருக்கு பதிலாக டத்தோ இரமணன் போட்டியிடுகிறார். இவரின் வெற்றிக்கு சிவராசா உட்பட அனைவரும் பாடுபட வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.