
எதிர் தரப்பில் ஒரு பிரதமர் வேட்பாளரையாவது தரமான வேட்பாளர் என நிரூபிக்க முடியுமா? என உலு சிலாங்கூர் நாடாளுமன்ற பக்காத்தான் வேட்பாளர் டாக்டர் சத்ய பிரகாஷ் சவால் விடுத்துள்ளார்.
இந்த நாட்டின் அரசு செயல்பாடுகள் ஓரவஞ்சனையாக இருப்பதாகத் தெரிவித்த டாக்டர் சத்யபிரகாஷ், உலு சிலாங்கூரில் மக்கள் தொகை அதிகம், ஆனால் கோலா குபு பாருவில் உள்ள மருத்துவமனை என்ன லட்சணத்தில் உள்ளது? முழுமையான வசதி உண்டா?
சில சிகிச்சைக்கு செலாயாங் சுங்கை பூலோ மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய சூழல் தான் உள்ளது. அந்த மருத்துவமனைகள் அருகாமையில் உள்ளதா? என அவர் கேள்வி எழுப்பினார் .