தெற்கு காசாவின் ரஃபா நகரம் மீது இஸ்ரேல் குண்டு வீச்சு: 35 பேர் உயிரிழப்பு

காசா: தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் அங்கிருந்த 1,200 பேரை சுட்டு கொன்றனர். 250 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஹமாஸ் படைகளும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலின் வர்த்தக மையமான டெல் அவிவ் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக நேற்று ஹமாஸ் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் இஸ்ரேல் விமானங்கள் போரினால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த ரஃபாவில் உள்ள முகாம் மீது சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கியது.
இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், மற்றும் குழந்தைகள் ஆவர்.

reuters

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles