எஸ்பிஎம் தேர்வில் பீஷ்மர் ஜெயரத்தினம் 9A பெற்று சாதனை

கோலாலம்பூர், மே 28-
நாடு தழுவிய நிலையில் நேற்று வெளிவந்த எஸ்.பி.எம் தேர்வில் சிரம்பான், பாஜாம்மை சேர்ந்த பீஷ்மர் ஜெயரத்தினம் ஒன்பது ஏக்கள் ஒரு பி பிளஸ் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கல்வியில் ஆரம்பத்தில் இருந்து மிகவும் ஈடுபாடு கொண்டு படித்து வந்த பீஷ்மர் கல்வியில் படிப்பில் கவனம் செலுத்தி படித்து வந்ததால் இந்த வெற்றியை பெற முடிந்ததாக தேசம் தொலைக்காட்சிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் பீஷ்மர் தெரிவித்தார்.

பீஷ்மர் தேர்வுக்கு அமர்ந்த பத்து பாடங்களில் ஒன்பது பாடங்களில் ஏக்கள் பெற்றுள்ள அதேநேரத்தில் தமிழ் மொழியில் பி பிளஸ் எடுத்துள்ளார்.

இந்த சாதனையை படைக்க பலர் எனக்கு துணை புரிந்தார்கள். முதன்மையாக MPT tuition centreருக்கு பெரும் நன்றியை கூறிக்கொள்கிறேன். ஆசிரியர் பிரகாஷ், மற்றும் தேவேந்திரன் இருவரும் தனக்கு 2 ஆண்டுகள் கவனம் செலுத்தி பாடம் போதித்து வந்ததாக பீஷ்மர் தெரிவித்தார்.

இந்த சாதனைக்கு என் பெற்றோர் ஜெயரத்தினம் – பிரியா இருவரும் ஊக்கமளித்தார்கள். மேலும் உறவினர்கள் ஒத்துழைப்பு வழங்கினர். பெற்றோர்களின் தியாகம் நான் 9A பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நான் IT/ Computer science துறையில் மேற்கல்வியை தொடர்ந்து படித்து, software developer ஆகி சாதனை படைக்க இலக்கு வைத்திருக்கிறேன் என்பதை லட்சியமாக கொண்டுள்ளார் பீஷ்மர்.

இந்த வெற்றிக்கு தந்தை ஜெயரத்தினம் தாயார் பிரியா இருவரும் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கினர். டியூசன் வகுப்பு கொண்டு வந்து அழைத்து செல்வமை பெற்றோர்களின் கடமை தவறாமல் செய்தனர். இந்த வேளையில் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் பீஷ்மர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

வீட்டில் முதல் பிள்ளையான பீஷ்மருக்கு ஒரு தங்கை இருக்கிறார் அவர் படிவம் இரண்டில் படித்து வருகிறார். பீஷ்மர் தந்தை ஜெயரத்தினம் என்ற அஜய் ஊடகவியலாளர் குணாளன் மணியம் அவர்களின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles