எஸ்பிஎம் தேர்வில் தமிழ் மொழி உட்பட 11 பாடங்களில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார் ரம்யா லிங்கம்

நாடு தழுவிய அளவில் எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் வெளியான வேளையில் இந்திய மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ளது பாராட்டுக்குரியது.

அந்த வகையில் கிள்ளான் செந்தோசா ராஜா மாஹாடி இடைநிலைப் பள்ளியில் பயின்ற மாணவி ரம்யா லிங்கம் 11ஏ பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

தனது ஆரம்பக் கல்வியை சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளியில் கற்ற இவர் எஸ்பிஎம் தேர்விலும் தமிழ் மற்றும் தமிழ் இலக்கியத்தில் முழு தேர்ச்சி பெற்றார்.

இவரின் தந்தை லிங்கம் முன்னாள் லோரி டிரைவர் ஆவார். இப்போது இவர் மாற்றுத் திறனாளியாக இருக்கிறார்.
தாயார் சரஸ்வதி இல்லத்தரசி ஆவார்

ரம்யாவின் இரு சகோதரிகளான செளந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா இப்போது உப்சி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயின்று வருகிறார்கள்.

மற்றோர் சகோதரி தரண்யா மலாயா பல்கலைக்கழகத்திலும் சகோதரர் மதன் கணேஷ் இயந்திர பொறியியல் துறையில் பயின்று வருகிறார்.

பல சிரமங்களை எதிர் நோக்கிய போதிலும் லிங்கம் – சரஸ்வதி தம்பதியர் தங்களது பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க எடுத்து கொண்ட முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles