
பேராக் மாநிலத்தில் ஈப்போ உங்கு ஓமார் தொழில் நுட்பக் கல்லூரியில் டிப்ளமோ பயிலும் மாணவிக்கு பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ. சிவகுமார் மடிக் கணினியை வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
தாமான் பத்து காஜா பெர்டானாவில் வசிக்கும் இந்த மாணவியின் இல்லத்திற்கு நேரடியாக சென்று அவர் இந்த உதவியை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தக்க நேரத்தில் தமக்கு உதவி கரம் நீட்டிய சிவகுமாருக்கு மாணவி நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

