


கடந்த 16 மே முதல் 18 மே வரையிலும் நடந்து முடிந்த இளம் கண்டுபிடிப்பாளர்கள், மற்றும் சர்வதேச கண்டு பிடிப்பு, புதுமை தொழில் நுட்ப போட்டி மற்றும் கண்காட்சியில் கலந்து கொண்ட ஷா ஆலம் ஈபோர் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இவ்வாண்டு 10 குழுக்களை இப்பள்ளி இப்போட்டிக்கு அனுப்பினர். அதில் 8 தந்கம் 2 வெள்ளி என தனது வெற்றி கனிகளைக் கைப்பற்றி வந்துள்ளது.
இச்சாதனை இப்பள்ளிக்கு மேலும் பெருமையைத் தேடி தந்துள்ளது என்பது உண்மையே.
கலந்து கொண்ட 42 மாணவர்கள் அடங்கிய 10 குழுக்களுக்கும் கலந்து கொண்ட 42 மாணவர்கள் அடங்கிய 10 குழுக்களுக்கும் வெற்றி கிடைத்தது.
இது ஒரு மகத்தான வெற்றி என்பது திண்ணம்.
சிறிய பள்ளியாக இருந்தாலும் 10 குழுக்களைத் தயார் செய்து அனுப்பிய இப்பள்ளியின் முயற்சி வியக்கத்தக்கது.
சுமார் 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஈபோர் தமழ்ப்பள்ளி சாதனையில் பாராட்டுக்குரியது.
மேலும் மாணவர்களை இப்போட்டிக்குத் தயார் செய்து அனுப்பிய ஆசிரியர் திருவாளர் மா.செல்வம் அவர்களுக்கு “ டாக்டர் ஆகஸ்டின் ஓங் ‘ விருது வழங்கப்பட்டது.
இவ்வாண்டின் மிகச் சிறந்த ஆலோசகர் விருதைப் பெற்ற திருவாளர் செல்வம் அவர்களின் சேவை மேலும் சிறப்புக்குரியது.
அவரின் சிறந்த வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவம் பாராட்டுக்குரிய செயல் என்பது இவ்வெற்றியே காட்டுகிறது.
128 மாணவர்கள் மற்றும் 13 ஆசிரியர்கள் இப்பள்ளியில் பணிபுரிகின்றனர்.
இப்பள்ளியில் தரமான கல்வி போதிக்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளாக, இப்பள்ளி பல்வேறு புதுமை மற்றும் தொழில் நுட்ப போட்டிகளில் பங்கேற்றுள்ளது.
இப்போட்டியில் மாணவர்கள் சிறப்பாக பங்கு கொள்ள உதவிகரம் நீட்டிய பள்ளி மேலாண்மை வாரிய தலைவர் திரு.செல்வராஜா மற்றும் அவர்தம் செயலவை உறுப்பினர்கள், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.ஜெகஜீவன் மற்றும் அவர்தம் செயலவை உறுப்பினர்கள், பெற்றோர்கள் , பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஈபோர் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி மாலா அவர்கள் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
மேலும் பள்ளி மாணவர்கள் மிகுந்த முயற்சியுடனும் நம்பிக்கையுடனும் இப்போட்டியில் பங்கு கொண்டது பாராட்டுக்குரியது.
உலகத் தரம் வய்ந்த மாணவர்களை உருவாக்குவதே இப்பள்ளியின் குறிக்கோளாக திகழ்கிறது.
இனி வரும் காலங்களிலும் , ஈபோர் தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் நவீன கல்வி நடைமுறைகளுடன் ஒன்றினைந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சிறந்த சாம்ராஜ்யத்தை உருவாக்குவது திண்ணம்.

