ஈப்போ மாவட்ட போலீசாரின் அதிரடி நடவடிக்கைகள்

ஈப்போ, ஜுன். 2:
இன்று ஞாயிற்றுக்கிழமை விடிற்காலையில், ஈப்போ மாவட்ட காவல்துறை மற்றும்
தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்பு (AADK)
ஒருங்கிணைந்து சாலை தடுப்பு மற்றும் ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இங்குள்ள ஜாலான் பாசிர் பூத்தேவில் உள்ள தெருவின் ஸடேசன் 18 வளாகத்தில் போலீஸ்படையினர் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த போலீஸ் நடவடிக்கையில்
மொத்தம் 53 அதிகாரிகள் மற்றும்
ஈப்போ மாவட்ட போலீஸ்
பணியாளர்கள், 16 தன்னார்வ உறுப்பினர்கள்
மற்றும் 6 அதிகாரிகள் மற்றும் தேசிய போதைப் பொருள் எதிர்ப்பு அமைப்பின் பேராக் மாநில (AADK) உறுப்பினர்கள் கலந்துக் கொண்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ்படை தலைவர் ஏசிபி அபாங் ஜைனல் அபிடின் அபாங் அமாட் கூறினார்.

இந்நடவடிக்கையில், 112
மோட்டார் சைக்கிள்கள் , 14 முதல் 36 வயதிற்குட்பட்ட110 பேர் பிடிபட்டனர். தனி நபர்கள் மற்றும்
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்
பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த அதிரடி நடவடிக்கைகள் வாயிலாக
26 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
என்று அவர் குறிப்பிட்டார்.

இவர்கள் தனிநபராக பல்வேறு சாலை போக்குவரத்து குற்றத்தில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில் சட்டம் 64(1) பிரிவின் கீழ் வாகன கட்டமைப்புகள்,
சாலைப் போக்குவரத்து (APJ) 1987 [சட்டம் 333] , பிரிவின் கீழ் 4 தனி நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், கவனக்குறைவாக மோட்டார் சைக்கிளை ஓட்டிய நடவடிக்கைகள்
பிரிவு 42 (1) ஏபிஜே 1987 இன் கீழ் ஆபத்தானது. அதோடு, ஆபத்தான செயல்பாடு என்ற அடிப்படையில் 257 சம்மன்கள்
பல்வேறு தவறுகளுக்காக வெளியிடப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், ஈப்போ மாவட்ட காவல்துறையும் மற்றும் மாநில ஏஏடிகி அமைப்பும் இணைந்து செயல்பட்டதால், பிடிபட்டவர்களிடம்
சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டது. அப்படி சிறுநீர் பரிசோதனை
முடிவுகள் எதிர்மறையாகக் காணப்பட்டால் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

யாராக இருந்தாலும் எந்தவொரு போதைப்பொருள் துஷ்பிரயோகத்திலிருந்து தப்பிக்க முடியாது என்று அவர் எச்சரித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles