
கூட்டணி கட்சிகளின் அடுக்கடுக்கான நிபந்தனைகளால் மோடி உள்ளிட்ட பாஜக
தலைவர்கள் அதிர்ச்சி.
பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் நிதிஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு அளித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும்; தங்கள் ஆதரவின்றி பாஜக ஆட்சியமைக்க முடியாது என்பதால் அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கள், சபாநாயகர் பதவிகளை இருவரும் கேட்கின்றனர்
பாஜக கூட்டணி 290 தொகுதிகளிலும்,இந்திய கூட்டணி 235 தொகுதிகளிலும், மற்றவை 18 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இதில் பாஜக 239 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜக தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது.
பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என்றும் ஐக்கிய ஜனதாதளம் போர்க்கொடி உயர்த்தியுள்ளது. 16 எம்பிக்களை வைத்துள்ள சந்திரபாபு நாயுடு, 11 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவியை கேட்டுள்ளார்.
7எம்பிக்களை வைத்துள்ள மாராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, 3 ஒன்றிய அமைச்சர் பதவிகளை கேட்டுள்ளார்.
கூட்டணி கட்சிகளின் அடுக்கடுக்கான நிபந்தனைகளால் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

