
புத்ராஜெயா, ஜூன் 6- பினாங்கு மாநிலத்தின் சுங்கை பாக்காப் தொகுதி இடைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் வரும் ஜூன் 22 ஆம் தேதி நடைபெறும் வேளையில் ஜூலை 6ஆம் தேதி வாக்களிப்பு இடம் பெறும் என
தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி ஷாரோம் கூறினார்.
சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர் நோர் ஜம்ரி லத்திப் (வயது 56) கடந்த மே 24ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது
நாட்டின் பதினைந்தாவது பொதுத் தேர்தல் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பிறகு நடைபெறும் எட்டாவது இடைத் தேர்தலாக சுங்கை பாக்காப் தொகுதி தேர்தல் விளங்குகிறது

