
டெல்லி: சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் எவ்வளவு வற்புறுத்தி கேட்டாலும், சில முக்கிய துறைகளை தன்வசமே வைத்திருக்க பாஜக முடிவு செய்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்கான முனைப்பில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
பாஜக இந்த முறை தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழல் உள்ளது. கூட்டணி கட்சிகளின் உதவியோடு தான் பாஜக ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் உள்ளது.
அப்படி கூட்டணி என்று வருகின்றன போது சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் முக்கிய பங்கு வகித்துள்ள நிலையில் இருவருக்கும் 28 எம்பிக்களின் ஆதரவு உள்ளது.
சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்ளிட்டோர் தங்களுக்கு சில முக்கிய துறைகளும் அதே போல முக்கிய அமைச்சர்களும் வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அந்த வகையில், உள்துறை, நிதித்துறை, ரயில்வே துறைகளை தன்வசமே வைத்திருக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

