மலேசியன் ஏர்லைன்ஸின் சென்னைக்கு புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனஃ!

கோலாலம்பூர்: ஜூன் 7-
வெள்ளம் காரணமாக சென்னை விமான நிலையம் (MAA) மூடப்பட்டதால், கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு புறப்பட வேண்டிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோலாலம்பூரிலிருந்து புறப்பட இருந்த MH182 விமானம் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையம் திங்கள்கிழமை (டிச 4) காலை 9.17 மணி முதல் மூடப்பட்டுள்ளது.

“இந்த விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகள் டிசம்பர் 19, 2023 வரை பயணத்தை ஒத்திவைக்கலாம் . அல்லது பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமானங்களில் மீண்டும் முன்பதிவு செய்யக் கோரலாம் அல்லது பணத்தைத் திரும்பப் பெறலாம்” என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

உடனடி உதவிக்கு, பயணிகள் மலேசியா ஏர்லைன்ஸின் உலகளாவிய தொடர்பு மையத்தை 1 300 88 3000 (மலேசியாவிற்குள்) அல்லது +603 7843 3000 (மலேசியாவுக்கு வெளியே) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles