
கோலாலம்பூர், ஜூன் 7-
காசாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் இனப்படுகொலைக்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் பாலஸ்தீனம் தொடர்ந்து பாதுக்கப்பட வேண்டும் என அவர் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
தலைநகர் கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற 37ஆவது ஆசிய-பசிபிக் வட்டமேசை மாநாட்டில் பேசிய பிரதமர் அன்வார்,
பாலஸ்தீனம், உக்ரைன், மியான்மர் ஆகிய உலகின் பல பகுதிகளில் ஆயுத மோதல்களும் போர்களும் சாதாரணமாகி வருகின்றன.
அதே வேளையில் சூடான், ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, ஹைட்டியில் ஏற்பட்ட நெருக்கடிகளையும் மறந்துவிட முடியாது. தற்காப்பு என்ற சாக்குப்போக்கின் கீழ் கொலைகள், குடியேற்ற காலனித்துவம், பழங்குடியின மக்களை இடம்பெயர்வதற்கான முயற்சி ஆகியவை ஒரு திட்டமிட்ட இனப்படுகொலையாகும்.
இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக மலேசியா தொடர்ந்து குரல் கொடுக்கும் என அவர் வலியுறுத்தினார்.
berama

