இஸ்ரேலிய கொடி ஸ்டிக்கரை உணவகத்தில் ஒட்டிய ஆடவருக்கு 100 வெள்ளி அபராதம்!

காஜாங், ஜூன் 7- துரித உணவகம் ஒன்றில் இஸ்ரேலிய கொடியின் படம்
பொறித்த ஒட்டு வில்லையை (ஸ்டிக்கர்) ஒட்டிய குற்றத்தை ஒப்புக்
கொண்ட கார் வாடகை நிறுவனம் ஒன்றின் பகுதி நேர ஊழியருக்கு
இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 100 வெள்ளி அபராதம் விதித்தது.

அபராதத் தொகையைச் செலுத்த த் தவறினால் ஒரு நாள்
சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் நுருள்
ஹஃப்சான் அப்துல் அஜிஸ் தனது தீர்ப்பில் கூறினார்.

எனினும்குற்றஞ்சாட்டப்பட்டவரான தாரிக் ஹஸிம் முகமது யூஸ்ரி (வயது 25)
அபராதத் தொகையைச் செலுத்தினார்.

தண்டனையை வழங்குவதற்கு முன் “நீங்கள் ஏன் இஸ்ரேலிய கொடி
ஸ்டிக்கரை ஒட்டினீர்கள்?“ என்று மாஜிஸ்திரேட் தாரிக் ஹஸிமிடம்
கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் ‘எனது குடும்ப உறுப்பினர்களில் சிலர்
பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்து அந்த துரித
உணவகத்தில் அக்கொடியை ஒட்டினேன்“ என்று பதிலளித்தார்.

bernama

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles