கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் 4 பெர்சத்து எம்பிக்கள் மீதான சபாநாயகரின் நிலைப்பாடு என்ன? மைபிபிபி இளைஞர் அணி தலைவர் சத்திய கேள்வி

கோலாலம்பூர் ஜூன் 7-
நான்கு பெர்சத்து எம்.பி.க்கள் மற்றும் கட்சி தாவல் தடுப்பு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோஸ்ரீ ஜோஹாரியின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்து கொள்ள மைபிபிபி கட்சி விரும்புவதாக அதன் இளைஞர் அணி தலைவர் சத்திய சுதாகரன் இன்று தெரிவித்தார்.

அணி மாறியதால் பதவிகள் நீக்கப்பட்ட நான்கு பெர்சத்து எம்.பி.க்களின் இடங்களை ஏன் காலியாக அறிவிக்கவில்லை என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

பெர்சத்து கட்சியைச் சேர்ந்த Syed Abu Hussin Hafiz Syed Abdul Fasal (Bukit Gantang), Dr. Zulkafperi Hanapi (Tanjong Karang), Iskandar Dzulkarnain Abdul Khalid (Kuala Kangsar), and Suhaili Abdul Rahman (Labuan ஆகிய இந்த எம்.பி.க்கள் பகிரங்கமாக ஒற்றுமை அரசாங்கத்திற்கு தங்கள் ஆதரவை அறிவித்துள்ளனர்.

கடந்த தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் இப்போது அணி மாறி உள்ளனர்.

இந்த நான்கு எம்பிகள் மீதான சபாநாயகர் ஜொஹாரி அப்துல் எடுக்கும் முடிவு நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நேர்மைக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க, கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தை விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்று myPPP இளைஞர் பிரிவு கடுமையாகப் பரிந்துரைக்கிறது.

கட்சி தாவல் வாக்காளர்களின் நம்பிக்கையை குறைக்கிறது. மேலும் நம்பி வாக்களித்தவர்களுக்கு நம்பிக்கை இழைப்பதாகும்.
மேலும் அரசியல் நிலப்பரப்பை சீர்குலைக்கிறது என்று அவர் சுட்டி காட்டினார்.

வலுவான கட்சி தாவல் தடுப்பு சட்டம் இல்லாதது எம்பிக்கள் அணி தாவ வழி வகுக்கிறது.இது பொறுப்பற்ற செயல் மற்றும் வாக்காளர்களின் ஆணைக்கு துரோகம் இழைப்பதாகும்க்ஷ

இது உடனடி சட்ட சீர்திருத்த நடவடிக்கைக்கான அழைப்பு என்று நாங்கள் நம்புகிறோம். myPPP இளைஞர் பிரிவு ஜனநாயக ஒருமைப்பாடு மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு வாதிடுவதில் உறுதியாக உள்ளது.

கட்சி தாவல் தடுப்பு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆதரவளிக்குமாறும் மேலும் வெளிப்படையான மற்றும் நிலையான அரசியல் சூழலை நோக்கி ஒன்றிணைந்து செயல்படுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் சொன்னார்.

new- muthamil manan

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles