பதினைந்து வயது பெண் மானபங்கம்- விசாரணைக்காக மருத்துவர் தடுத்து வைப்பு!

ஈப்போ, ஜூன் 7- பதினைந்து வயது பெண் ஒருவர் மானபங்கப்படுத்தப்பட்டது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக மருத்துவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அந்த பதின்ம வயதுப் பெண் கடந்த 4ஆம் தேதி இரவு 9.14
மணியளவில் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து கடந்த புதன்
கிழமை அந்த மருத்துவர் கைது செய்யப்பட்டதாகப் பேராக் தெங்கா
மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஹபிஸூல் ஹெல்மி
கூறினார்.

மருத்துவமனை ஒன்றின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுக்
கொண்டிருந்த போது தன்னை அம்மருத்துவர் பாலியல் ரீதியாகப்
பலாத்காரம் செய்ததாக அப்பெண் போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளதாக
அவர் சொன்னார்.

BERNAMA

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles