உலகத்தில் இருக்கும் தமிழ் தொழில் முனைவோர், திறனாளர்களை ஒன்றிணைக்கும் 13 ஆவது எழுமின் மாநாடு சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் கோலாகலமாக தொடங்கியது!

டாவோஸ், ஜூன் 7-
சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் உலகத் தமிழ் முனைவோர்
மாநாட்டில் மலேசியா உட்பட 30க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 450 பேராளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழர்களுக்குள் வர்த்தக பரிமாற்றங்களை முன்னெடுக்கும் முயற்சியாக எழுமின் அமைப்பு தொடர்ந்து இம்மாநாட்டை நடத்தி வருகிறது.

உலக அரங்கில் தமிழர்களின் வர்த்தகம் விரிவடைய வேண்டும் என்பதை அடித்தளமாகக் கொண்டு பலர் வர்த்தக பரிமாற்றங்களை இந்த மாநாட்டில் முன்னெடுத்து வருகின்றார்கள்.

கனடா, இந்தியா, ஐக்கிய அரபு சிற்றரசு, இங்கிலாந்து, அமெரிக்கா, வியட்நாம் கம்போடியா போன்ற நாடுகளில் இந்தியர்கள் எம்மாதிரியான வர்த்தக வாய்ப்புகளை முன்னெடுக்க முடியும் என்பது குறித்தும் இந்த மாநாட்டில் ஆழமாக பேசப்பட்டது.

ஜூன் ஏழாம் தேதி தொடங்கி ஒன்பதாம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டின் இறுதி நாளில் நூற்றுக்கும் அதிகமான வர்த்தக ஒப்பந்த புரிந்துணர்வு ப ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மலேசியாவில் இருந்து 30 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

எஸ் பி கேர் குழும நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் மலேசியக் குழுவிற்கு தலைமை ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles