தமிழ்நாடு பாஜகவில் வெடித்தது உட்கட்சி பூசல்.. பொய் சொல்வது அண்ணாமலை ரத்தத்திலேயே ஊறிவிட்டதாக கல்யாணராமன் சாடல்!!

சென்னை : ஜூன் 8-
மக்களவை தேர்தல் தோல்வியால் தமிழ்நாடு பாஜகவில் அடுத்தடுத்து உட்கட்சி கோஷ்டி பூசல் வெடித்து வருகிறது.

முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை நேற்று அண்ணாமலையை எச்சரித்த நிலையில்
அண்ணாமலை, அவரது ஆதரவாளர்கள் மீது கட்சியின் அறிவுசார் பிரிவு மாநில தலைவர் கல்யாணராமன் சரமாரி புகார் தெரிவித்துள்ளார்

2014-ல் பொன்.ராதா தலைமையில் பாஜக தேர்தலை சந்தித்தபோது 9 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே பாஜக டெபாசிட் இழந்தது.

தற்போது அண்ணாமலை தலைமையில் 23 இடங்களில் போட்டியிட்டு 11 இடங்களில் டெபாசிட் இழந்தது.

2014-இல் 42,000 வாக்கு வித்தியாசத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் தோல்வி, அண்ணாமலை அதைவிட 3 மடங்கு அதிக வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார்.

போலீஸ் அதிகாரியாக 6 ஆண்டு மட்டுமே பணிபுரிந்த அண்ணாமலை 10 ஆண்டு பணிபுரிந்ததாக பொய்யான தகவல் கூறுகிறார்.

பொய் சொல்வது அண்ணாமலை ரத்தத்திலேயே ஊறிவிட்டது என்று அவர் கடுமையாக சாடினார்.

தினகரன்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles