
அண்மைையில் சீர்திருத்தம் செய்யப் பட்ட பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் சுகாதாரம்,(பதிவு செய்வதற்கான கட்டணம் மற்றும் திறனாய்வு வழங்குதல் பதிவு) 2024 எனும் மனிதவள அமைச்சின் சுற்று அறிக்கையின் வாயிலாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறித்தும்,அதனால் அத் துறை வேலை ஊழியர்களுக்கு ஏற்படும் சுமை குறித்தும் சமூக ஆர்வலர் திரு சந்திர சேகரன் ஆறுமுகம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அந்த கட்டுமான துறையில் வேலை செய்யும் பாரம் தூக்கி இயந்திர ஓட்டுனர் தொழிலாளர்களுக்கான உரிம் (லைசென்ஸ்) புதிபிப்பு தொகை ரிங்கிட் மலேசிய 50.00 இருந்து 200.00 ஆக உயர்த்தி இருப்பது,அந்த இயந்திர ஓட்டுனர்களுக்கு பெறும் சுமையாக கருதுவதாகவும் மேலும்,
அந்த அதிகரிப்பை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டு்ம் என முன்னாள் பொக்கோ சட்டமன்ற வேட்பாளருமான திரு சந்திர சேகரன் மனிதவள அமைச்சர் திரு ஸ்திவன் சிம்க்கு X வலைதளம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

