தொடர்ந்து 3ஆவது முறையாக பிரதமராக நாளை பதவி ஏற்கிறார் மோடி:

புதுடெல்லி: தொடர்ந்து 3ஆவது முறையாக நாட்டின் பிரதமராக மோடி நாளை இந்திய நேரப்படி இரவு 7.15 மணிக்கு பதவி ஏற்க உள்ளார்.

அவரை புதிய பிரதமராக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டு உள்ளார்.மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள உலக தலைவர்கள் வருகிறார்கள்.

நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

240 இடங்களில் வெற்றி பெற்ற மோடி தலைமையிலான பாரதிய ஜனதா இப்போது கூட்டணி கட்சிகளுடன் 291 நாடாளுமன்ற தொகுதிகளுடன் ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles