
நிபோங் திபால், ஜூன் 10- சுங்கை பாக்காப் இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளரின் பெயர் வரும் ஜூன் 12ஆம் தேதி (புதன் கிழமை ) அறிவிக்கப்படும்.
வேட்பாளரை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்ட அந்த வேட்பாளரின் பெயர் ஒற்றுமை அரசின் மத்திய மன்றத்திடம் வரும் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று பி.கே.ஆர். கட்சியின் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி கூறினார்.
வேட்பாளரின் பெயர் கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் கட்சி தேர்தல் கமிட்டியின் கவனத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது. அந்த வேட்பாளரின் தகுதி தொடர்பான ஆய்வினை பினாங்கு மாநில தலைமைத்துவ மன்றம் மேற்கொண்டது என்று அவர் சொன்னார்.
Bernama

