
கோலாலம்பூர், ஜூன் 11 – இரு மாதங்களுக்கு முன்பு தனது வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்ட 114,000 வெள்ளி குறித்து விளக்கம் அளிக்கத் தவறியதற்காக வீட்டை புதுப்பிக்கும் குத்தகையாளர் ஒருவருக்கு 1,000 வெள்ளி அபராதமும், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மூன்று மாதச் சிறைத் தண்டனையும் விதித்து இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஒரு நபரிடமிருந்து திருடப்பட்டதாக அல்லது மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் பணத்தை வைத்திருந்ததாகவும் அது எவ்வாறு பெறப்பட்டது என்பதற்கான திருப்திகரமான விளக்கத்தை வழங்கத் தவறியதாகவும் கொண்டுவரப்பட்ட மாற்றுக் குற்றச்சாட்டை 37 வயதான முஹம்மது சாதிக் நா’மான் ஒப்புக்கொண்டதை அடுத்து நீதிபதி அஸ்ருல் டாருஸ் இந்த தீர்ப்பை வழங்கினார்.
கடந்த ஏப்ரல் 23 முதல் ஏப்ரல் 26 வரை பத்து கேவ்ஸ், தாமான் கோப்பராசி போலீஸில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்தததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
bernama

