
கோலாலம்பூர், ஜூன் 12- ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு அனைத்து சிறை சாலைகள், தார்மீக புனர்வாழ்வு மையங்கள், சிறப்பு மறுவாழ்வு மையங்கள், சிறப்பு தடுப்பு மையங்கள் மற்றும் ஹென்றி கர்னி பள்ளியில் உள்ள சிறைக் கைதிகளை அவர்களின் குடும்பங்களை மூன்றாவது மற்றும் நான்காவது நாளில் சந்திக்க அனுமதிக்கப் படுகின்றனர்.
முஸ்லிம் கைதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், கைதிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் எதையும் கொண்டு வர வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் ஆனால், சிறைச்சாலை கேன்டீனில் உணவு வாங்க முடியும் என்றும் சிறைச்சாலை துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.
bernama

