
விமான விபத்தில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா(51) உட்பட அவருடன் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக விமானம் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது.
அவர் பயணித்த ராணுவ விமானம் லிலொங்வேயில் இருந்து 45 நிமிடங்களில் மசுஸு விமான நிலையத்தில் அடைய வேண்டிய நிலையில் மாயமானது.
இதையடுத்து மலாவி நாட்டு அதிபர் லாசரஸ் சக்வேரா தேடுதல் பணியை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்
தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் தேடுதல் பணிகள் நடந்து வந்தன. இந்தநிலையில் தான் சிகன்காவா மலைப்பகுதியில் விமானம் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில் பயணித்த கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா(51) உட்பட அவருடன் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர்.
reuters

