
ஈப்போ, ஜுன். 13: நேற்று அன்ஜுங் பெர்சாமில் உள்ள டத்தாரன் தாசெக் திமூரில் உள்ள அவரது தாயின் சடலம் அவர்களின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதை விசாரிக்க உதவுவதற்காக 30 வயதுடைய ஒரு நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
பிற்பகல் 2 மணியளவில், தலையில் காயங்களுடனும் இரத்தத்துடனும் வீட்டின் அறையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் கிடந்தது.
ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் அபாங் ஜைனல் அபிடின் அபாங் அமாட் கூறுகையில், அத்தாயின் மரணம் தொடர்பான முழு விசாரணைக்காக, மாலை 5.15 மணியளவில் அந்த நபர் கைது செய்யப்பட்டதை அவர் உறுதி செய்தார்.
பிரேத பரிசோதனையின் முடிவுகள் நிலுவையில் இருக்கும் நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டவரின் மரணம் திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்டவரின் மகள், டெனிஷ், ( வயது 27), கூறுகையில் அவர் தனது தாயை நேற்றிரவு நள்ளிரவில் கடைசியாகப் பார்த்ததாகக் கூறினார். எட்டு மாத கர்ப்பிணியான அவர், மருத்துவ மனையில் தொடர்ந்து பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது. அதனால் நண்பர் வீட்டில் தங்கி விட்டதாக அவர் கூறினார்.
“இன்று காலை நான் உடல்நலப் பரிசோதனை மருத்துவமனையில் மேற்கண்டபோது, பலமுறை என் அம்மாவை அழைத்தேன்.
ஆனால் பதில் வரவில்லை.
என் அம்மாவுக்கு உணவு வழங்க உதவுவதற்காக வீட்டிற்கு அருகில் வசிக்கும் மற்றொரு நண்பரை அழைத்தேன். அதற்குப் பிறகு மீண்டும் ஒரு நண்பர் என்னைத் தொடர்பு கொண்டு என் அம்மா இறந்துவிட்டதாகத் தெரிவித்தார் என்று அவர் மனவேதனையுடன் கூறினார்.

