ரந்தாவில் நேசா வீடமைப்பு திட்டத்தை வெற்றிகரமாக கட்டி முடித்து 65 பேருக்கு சாவிகள் வழங்கப்பட்டது!

காளிதாஸ் சுப்ரமணியம்

ரந்தாவ், ஜூன் 16-
நேசாவின் ஒவ்வொரு உறுப்பினரும் சொந்த வீடு கொண்டிருப்பதை நேசா இலக்காக கொண்டுள்ளது என்று அதன் தலைவர் டத்தோ பி. சசிக்குமார் தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்தின் சொத்துடமை மேம்பாட்டிற்காக நேசா கூட்டுறவு நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.

பல போராட்டங்களுக்கு பின் நேசா தனது வீடமைப்பு திட்டத்தை ரந்தாவில் வெற்றிகரமாக கட்டி முடித்துள்ளது.

இதில் 65 பேருக்கு வீடுகளுக்கான சாவிகள் அதன் உரிமையாளர்களுக்கு ஒப்படைக்கட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று சாவிகளை எடுத்து வழங்கிய தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணனுக்கு தனது மனமார்ந்த நன்றியை டத்தோ சசிக்குமார் தெரிவித்தார்.

இந்த வீடமைப்புத் திட்டத்தில் வீடுகள் வாங்கியவர்களில் 32 பேர் நேசா கூட்டுறவு நிறுவனத்தை சேர்ந்தவர்களாவர்.

அதே வேளையில் வீடுகள் வாங்கியவர்களுக்கு இலவச ஸ்டாம்ப் டூட்டி, 10 சதவீதம் கழிவும் வழங்கப்பட்டது என்றும் டத்தோ சசிக்குமார் கூறினார்.

ரந்தாவைத் தொடர்ந்து கூலிம் கெடா, லிப்பிஸ் பேரா ஆகிய இடங்களிலும் நேசா புதியதாக வீடமைப்பு திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநிலத்திலும் நேசா கூட்டுறவுத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles