குறை சொல்வதே இவர்களுக்கு வழக்கம்!கோமாளிகள் திருந்த மாட்டார்கள்! டத்தோ இரமணன் சாடல்

காளிதாஸ் சுப்ரமணியம்

சுங்கை பாக்காப்: ஜூன் 21

பினாங்கு சுங்கை பாக்காப் இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நாளை நடைபெறும் வேளையில் பிரச்சாரம் சூடு பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ ஆர் இரமணன் சுங்கை பாக்காப்பில் களம் இறங்கி உள்ளார்.

இந்திய சமுதாயத்திற்கான திட்டங்களை குறை சொல்லும் கோமாளிகள் திருந்தவே மாட்டார்கள் என்று
மித்ரா ஏற்பாட்டில் சுங்கை பாக்காப் இந்திய சமுதாயத்துடனான சிறப்பு சந்திப்புக் கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்த இடைத் தேர்தலின் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் ஜொஹாரியும் கலந்துக் கொண்டார்.

எனது அமைச்சின் கீழ் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக பல திட்டங்களை அமல்படுத்தி உள்ளேன்.

தெக்குன் கோஸ் பிக் திட்டத்தின் வாயிலாக 30 மில்லியன் ரிங்கிட், அமானா இக்தியார் பெண் திட்டத்தின் வாயிலாக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் பேங்க் ரக்யாய் ஐபிரிவ் திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு மக்களிடமிருந்து முறையான விண்ணப்பங்கள் கிடைத்து வருகிறது.

அண்மையில் கூட தெக்குன் வாயிலாக சிறு தொழில் வர்த்தர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டது.

பேங்க் ரக்யாட்டின் ஐபிரிவ் திட்டத்திற்கு இதுவரை 900த்திற்கும் மேற்ப்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பங்களை முறையாக பரிசீலித்து உதவிகளை செய்யவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

இருந்தாலும் இந்த திட்டங்கள் குறித்து ஒரு சிலர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது வேடிக்கையாக உள்ளது.

இந்த கோமாளிகளை யாராலும் திருத்த முடியாது.
நான் அறிவித்த திட்டங்களில் வாயிலாக இந்திய சமுதாயம் நிச்சயம் பயன்பெறும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles