நல்ல தலைவர் டத்தோஸ்ரீ அன்வாரிடம்
நாட்டை ஒப்படையுங்கள்!
வாக்காளர்களுக்கு பிரபாகரன் வேண்டுகோள்

உலக அரங்கில் மதிக்கப்படக் கூடிய தலைவராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளங்கிக் கொண்டிருக்கிறார்.

அனைத்து இன மக்களால் மதிக்கப்படும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் நாட்டை ஒப்படையுங்கள் என்று பத்து நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் பிரபாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஊழல்வாதிகளிடம் நாட்டை ஒப்படைத்தால் மலேசியர்களின் எதிர்காலம் பாழாகிவிடும்.

ஆகவே வரும் நவம்பர் 19 ஆம் மலேசியர்கள் திரண்டு வந்து பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தால் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவி ஏற்பார்.

ஒரு நல்ல தலைவரிடம் நாம் நாட்டையும் நம் எதிர்காலத்தையும் ஒப்படைப்போம் என்று அவர் கூறினார்.

நேற்று பிரிக்பீல்ட்ஸ் பைன்ஸ் ஆர்ட்ஸ் மண்டபத்தில் நடைபெற்ற கலைவிழாவில் கலந்து கொண்ட லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாமி பாட்சில் மற்றும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனுக்கு விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் தியாகு மாலைகள் அணிவித்து பாராட்டினார்.

லெம்பா பந்தாய் கெஅடிலான் தலைவர்களான பக்தவச்சலம், ரேமன், ஷினா, மணியம், டாக்டர் பி எஸ் பிள்ளை மற்றும் டாக்டர் ஷான் முத்துசாமி, டாக்டர் நெல்சன் முருகன் உட்பட 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து ஆதரவு வழங்கினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles