அம்னோ தலைவரின் கோட்டையில்
பக்கத்தான் ஊடுருவல் !
தேர்தல் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்

அம்னோ தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கோட்டை என்று வர்ணிக்கப்படும் பகான் டத்தோவில் நேற்றிரவு நடைபெற்ற பக்கத்தான் ஹரப்பான் கூட்டத்தில் பெரும் அளவில் மக்கள் திரண்டு ஆதரவு வழங்கினர்.

பகான் டத்தோவில் உள்ள பாகான் பாசிரில் கடந்த வாரத்தில் அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை காட்டிலும் நேற்று பக்கத்தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது பெரும் அளவில் மக்கள் கூடியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகான் டத்தோவில் கெஅடிலான் கட்சி சார்பில் டத்தோஸ்ரீ முகமட் இஸ்கந்தார் மற்றும் ஊத்தாங் மெலிந்தாங் சட்டமன்ற தொகுதியில் கெஅடிலான் தேசிய மகளிர் அணி உதவித் தலைவி வசந்தி சின்னசாமி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இவர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

பகான் டத்தோ மற்றும் ஊத்தாங் மெலிந்தாங்கை இம்முறை பக்கத்தான் ஹரப்பான் கைப்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles