
கோலாலம்பூர் ஜூன் 23-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசு வெற்றிக்கு பாடுபட்டோம்.
ஆனால்
கண்ணியம் இல்லாதது போல் நடத்தப்பட்டதில் நாங்கள் பெரும் ஏமாற்றம் அடைந்த பிறகு, சுங்கை பாக்கப்பில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதில்லை என்ற நிலைப்பாட்டை MyPPP கட்சி எடுத்ததுள்ளது என்று அக்கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா இன்று தெரிவித்தார்.
அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதால் தொடர்ந்து, வாக்காளர் ஆதரவைப் பெற மைபிபிபி எந்தவொரு பிரச்சாரத்திலும் விலகி இருக்கும்.
தேர்தலுக்கு மட்டும் எங்களை பயன்படுத்தி கொள்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், மைபிபிபி கட்சிக்கு கண்ணியம் உள்ளது, எங்கள் உறுப்பினர்களுக்கு சுய மரியாதை உள்ளது.
நீங்கள் மரியாதையோடு அழைத்தால், நாங்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறோம், ஆனால் எங்களை வேலைக்கு மட்டுமே அழைக்கக்கூடாது.
ஏப்ரல் 2023 இல் சங்கங்களின் பதிவு இலாகா (ROS) கட்சி ரத்து செய்யப்பட்டதை மீட்டுக் கொண்டதை அடுத்து தேசிய முன்னணி ஏற்பாடு செய்த எந்தக் கூட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் கலந்துகொள்ள தங்களை மைபிபிபி கட்சியை அழைக்கவில்லை.
தேசிய முன்னணிக்கு எங்களின் பிளவு படாத ஆதரவு தொடர்கிறது.
அதேசமயம் ஒற்றுமை அரசாங்கத்தையும் ஆதரிக்கிறோம்.
இருப்பினும்
மைபிபிபியை தேசிய முன்னணி ஓரம் கட்டும் நடவடிக்கை நியாயமற்றது என்று அவர் சொன்னார்.
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை.
அவர்கள் சிங்கம் என்றும் நாங்கள் எலி என்றும் நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை.
ஆனால் பின்னர் தான் நாங்கள் யார் என்பது தெரிய வரும் என்று அவர் சொன்னார்.
மைபிபிபி கட்சியின் மத்திய செயலவை கூட்டத்திற்கு பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
மைபிபிபி கட்சியின் இளைஞர் அணி தலைவர் சத்தியா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி, செயலாளர் டத்தோ இண்டர் ஜிட் சிங், பொருளாளர் டத்தோ டல்ஜிட் சிங் மற்றும் தகவல் பிரிவைச் சேர்ந்த குமார் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

