
கோலாலம்பூர் ஜூன் 23-
நாட்டில் மிகவும் பழைய வாய்ந்த மைபிபிபி கட்சியின் 71 ஆம் தேசிய பேராளர் மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் உலக வாணிப மையத்தில் நடைபெறுகிறது என்று மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.
1,200 பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள்
கட்சியின் சட்ட விதிகளின் மிகப்பெரிய மாற்றம் செய்யப்படுகிறது.
தலைவரின் அதிகாரமும் குறைக்கப்படுகிறது. இத்தனை தவணைகள் மட்டுமே பொறுப்பில் இருக்கவும் சட்டம் திருத்தம் செய்யப்படுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி ஆகியோருக்கும் முறையாக அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
மைபிபிபி கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதையும் இந்த மாநாட்டில் பேராளர்கள்
முடிவு செய்வார்கள் என்று அவர் சொன்னார்.

