
குவாந்தான், ஜூன் 24-
வீடமைப்பு திட்டத்திற்கு சாலையை மேம்படுத்த
சிலாங்கூர் ( Selangor) பூச்சோங்கிலுள்ள கின்ராரா தமிழ்ப்பள்ளியின் ஒரு பகுதி கட்டிடத்தை உடைக்கப்படக்கூடும் என கோலாலம்பூர் மாநகர் மன்றம் தெரிவித்திருக்கிறது.
1946 இல் தொடங்கி, 78 ஆண்டு வரலாற்றை கொண்ட கின்ராரா தமிழ்ப்பள்ளியை வீடமைப்பு திட்டதிற்காக ஒரு பகுதியை உடைப்பது ஏற்றுகொள்ள முடியாத ஒன்று என பகாங் உரிமை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு கணேசன் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் படிக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் பிரச்சனை, 700 க்கு மேல் மாணவர்கள் படிக்கும் பள்ளியிலும் பிரச்சனை என்றால், ஒட்டுமொத்தத்தில் தமிழ்ப்பள்ளிகள் நம் நாட்டில் ஒரு பிரச்சினையின் அடையாளமாக மாறி வருகிறது என்று அவர் கூறினார்.
2020- இல் பள்ளியின் அருகாமையில் புதிய வீடமைப்பு திட்டத்தை உருவாக்க கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
ஒரு புதிய கட்டடம் கட்டப்படும் முன், எவ்வளவு நிலம் பயன்படுத்தப்படும், சாலை விரிவாக்கம் , வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதா மற்றும் அருகாமையில் இருக்கும் கட்டடங்களுக்கு ஏதாவது பாதிப்பு வருமா என்று எல்லாவகையிலும் ஆராய்ந்து பிறகுதான் அதன் ஒப்புதல் வழங்கி இருக்க வேண்டும்.
திடிரென்று சாலை விரிவாங்கத்திக்கு இடம் பற்றாக்குறை,அதனால் தமிழ்ப்பள்ளியின் ஒரு பகுதி இடிக்க வேண்டும் என்று கூறுவது, மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் தூர நோக்கு சிந்தனையின்மை மற்றும் திட்டமிடல் பிழை என்று தெளிவாக தெரிகிறது.
இன்று சாலை விரிவாங்கத்திக்கு பள்ளியின் ஒரு பகுதி தேவைப்படும் என்று சொல்லும் இவர்கள் ,எதிர்கால வளர்ச்சிக்கு முழு இடமும் தேவைப்பட்டால் என்ன செய்வது?
அதனால் பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், மற்றும் பள்ளி மேலாளர் வாரியம் எந்த விதத்திலும் தமிழ்ப்பள்ளிகளின் விடயத்தில் சமரசம் செய்யாமல் உறுதியோடு இருக்க வேண்டும்.
தமிழ் மக்கள் அனைவரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று திரு கணேசன். கேட்டுக்கொண்டார்.
தமிழ்ப்பள்ளி என்பது நம் இனத்தின் வரலாற்று ஆவணம், தமிழர்களின் தாய்மொழியின் கருவறை. அதை வெரும் ஒரு கட்டிடமாக யாரும் நினைத்து விட வேண்டாம்.
நாட்டின் வளர்ச்சிக்கு காலத்திற்கு ஏற்றார்போல் மாற்றங்கள் தேவை ஆனால் அந்த மாற்றங்கள் ஒரு போதும் தமிழர்களின் அடையாளமாக இருக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு வராமல் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

