

குவாந்தான் ஜூன் 24-
நாட்டின் பிரபலமான மாரான் மரத்தாண்டவர் ஆலய நிர்வாக தேர்தல் பெரும் சர்ச்சையில் முடிந்திருக்கும் வேளையில் இப்போது இந்த விவகாரம் ஆர்ஓஎஸ் இலாகா வுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் நிர்வாக தேர்தல் நேற்று பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்றது.
நேற்றைய தேர்தலில் மொத்தம் 461 பேர் வாக்களித்தனர்.
நடப்பு தலைவர் டத்தோ தமிழ் செல்வத்தை எதிர்த்து முன்னாள் தலைவர் ராமன் போட்டியிட்டார்.
கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெற்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் டத்தோ தமிழ் செல்வம் 206 வாக்குகளை பெற்றார்.
இராமன் 250 வாக்குகளை பெற்றார்
5 வாக்குகள் செல்லுபடியாகாத நிலையில் 15க்கும் மேற்பட்ட வாக்கு தாள் வாக்குப் பெட்டிக்குள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுபெரும் சர்ச்சையாகி வாக்குவாதம் வரை சென்றது.
இதனால் தேர்தல் அதிகாரிகள் வாக்குப் பெட்டியை மாரான் போலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று புகார் ஒன்றையும் பதிவு செய்தனர்.
இதனிடையே இந்த தேர்தலில் இராமன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருப்பதால் அவரின் வெற்றி செல்லுமா அல்லது மறு தேர்தலா என்பது குறித்து ஆர்ஓஎஸ் எடுக்கும் முடிவில் உள்ளது.
இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று இருப்பதால் மறு தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று இராமன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

