பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளி நிலத்தில் கை வைக்காதீர்கள் பள்ளியை பாதுகாக்கும் நடவடிக்கை குழு போர்க்கொடி

பூச்சோங் ஜூன் 27-
700 மாணவர்கள் கல்வி பயின்று வரும் பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளி நிலத்தில் கை வைக்க வேண்டாம் என்று தமிழ்பள்ளியை பாதுகாக்கும் நடவடிக்கை குழு இன்று போர்க்கொடியை உயர்த்தி உள்ளது.

வீடமைப்பு திட்டத்திற்கு சாலையை மேம்படுத்த
சிலாங்கூர் பூச்சோங்கிலுள்ள கின்ராரா தமிழ்ப்பள்ளியின் ஒரு பகுதி கட்டிடத்தை உடைக்கப்படலாம் என கோலாலம்பூர் மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.

1946 இல் தொடங்கி, 78 ஆண்டு வரலாற்றை கொண்ட கின்ராரா தமிழ்ப்பள்ளியை வீடமைப்பு திட்டதிற்காக ஒரு பகுதியை உடைப்பது ஏற்றுகொள்ள முடியாத ஒன்று என கின்ராரா தமிழ் பள்ளியை காக்க புறப்பட்டுள்ள நடவடிக்கை குழு தலைவர் டாக்டர் ஸ்ரீராம் தெரிவித்தார்.

2020- இல் பள்ளியின் அருகாமையில் புதிய வீடமைப்பு திட்டத்தை உருவாக்க கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

திடிரென்று சாலை விரிவாங்கத்திக்கு இடம் பற்றாக்குறை,அதனால் தமிழ்ப்பள்ளியின் ஒரு பகுதி இடிக்க வேண்டும் என்று கூறுவது, மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் தூர நோக்கு சிந்தனையின்மை மற்றும் திட்டமிடல் பிழை என்று தெளிவாக தெரிகிறது.

இன்று சாலை விரிவாங்கத்திக்கு பள்ளியின் ஒரு பகுதி தேவைப்படும் என்று சொல்லும் இவர்கள் ,எதிர்கால வளர்ச்சிக்கு முழு இடமும் தேவைப்பட்டால் என்ன செய்வது? என்று அவர் கேள்வியை எழுப்பினார்.

கின்ராரா தமிழ் பள்ளியை காக்க அனைத்து தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த பள்ளியின் ஒரு பகுதியை இடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

சாலை விரிவாக்கத்திற்கு மற்ற பக்கத்தில் அமைந்துள்ள ராணுவ முகாம் அருகில் சாலையை அமைக்கலாம

ஆகவே அரசாங்கம் மற்றும் கல்வி அமைச்சு இந்த விவகாரத்தில் தலையிட்டு கின்ராரா தமிழ்ப்பள்ளியை காப்பாற்ற மற்றும் நிலத்தை கையகப்படுத்தாமல் இருக்க பாதுகாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இன்று கின்ராரா தமிழ் பள்ளியின் முன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்ப் பள்ளியை காக்க புறப்பட்டுள்ள நடவடிக்கை குழுவைச் சேர்ந்த டாக்டர் ஜி. மணிமாறன், ராஜரத்தினம், மைக்கல் தமிழரசன், விவேகானந்தன் தமிழரசன், டத்தோ டாக்டர் கலைவாணர் உட்பட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles