
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள சிரம்பான் நாடாளுமன்ற தொகுதியில் ஜசெக தலைமை செயலாளர் அந்தோணி லோக் மீண்டும் போட்டியிடுகிறார்.
நாட்டில் புகழ்பெற்ற நேர்மையான அரசியல்வாதியாக விளங்கும் அந்தோணி லோக் தொகுதி மக்களுக்கு மிகப்பெரிய அளவில் சேவைகளை வழங்கி இருக்கிறார்.
சிரம்பான் தொகுதியில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கும் இந்து ஆலயங்களுக்கு மிகப் பெரிய அளவில் மானியங்களை வழங்கி இருக்கிறார்.
சிறந்த மக்கள் சேவையாளராக விளங்கிக் வரும் அந்தோணி லோக் கடந்த தேர்தலை காட்டிலும் இம்முறை அதிக பெரும்பாலான வாக்குகளில் வெற்றி பெறுவார் என்று நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெ. அருள்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

