
நாடே எதிர்பார்க்கும் ஒரு தேர்தல் களமாக இப்போது சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி மாறியுள்ளது.
துன் சாமிவேலு வின் கோட்டையாக விளங்கிய சுங்கை சிப்புட் 2008 பொதுத் தேர்தலில் கெஅடிலான் கட்சியிடம் வீழ்ந்தது.
2013,2018 இல் நடைபெற்ற தேர்தலில் சுங்கை சிப்புட்டில் கெஅடிலான் வாகை சூடியது.
இம்முறை இந்த தொகுதியை கைப்பற்றும் வகையில் ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் களம் இறங்கி உள்ளார்.
சுங்கை சிப்புட்டில் விக்னேஸ்வரனுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இருப்பினும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் கெஅடிலான் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடும் எஸ். கேசவனும் கடுமையான போட்டியை வழங்கி கொண்டிருக்கிறார்.
அடுத்த வாரத்தில் கேசவனை ஆதரித்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் ரபிஸி ரம்லி ஆகியோர் களம் இயங்குவதால் சுங்கை சிப்புட்டில் தேர்தல் பிரச்சாரம் மேலும் அனல் பறக்கலாம்


