
பக்கத்தான் ஹரப்பான் கோட்டை என்று தெரிந்தாலும் துணிச்சலுடன் பினாங்கு ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதியில் களம் இறங்கியிருக்கும் ஐபிஎப் தலைவர் டத்தோ லோகநாதன் தனது பிரச்சாரத்தை தீவிர படுத்தியுள்ளார்.
32 ஆண்டுகளுக்கு பின்னர் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்கும் மகிழ்ச்சியில் ஒட்டுமொத்த ஐபிஎப் தொண்டர்கள் ஜெலுத்தோங்கில் களம் இறங்கியுள்ளனர்.
ஜசெக சார்பில் பிரபல வழக்கறிஞர் ராயர் மீண்டும் ஜெலுத்தோங்கில் போட்டியிடுகிறார்.
முன்பு இந்த தொகுதி மறைந்த கர்ப்பால் சிங் கோட்டையாக விளங்கியது.
இருப்பினும் ஜசெக வேட்பாளர் ராயருக்கு டத்தோ லோகநாதன் கடுமையான போட்டியை வழங்கி கொண்டிருக்கிறார்.
இதனிடையே ஐபிஎப் கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர்ந்து ஐபிஎப் வெற்றிக்கு பாடுபடுவோம் அதன் செயலாளர் மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

