
உத்திர பிரதேசம், ஜூலை 3-
உத்திர பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 122ஆக உயர்ந்துள்ளது.
சாமியாரின் சொற்பொழிவு முடிந்து ஒட்டுமொத்தமாக மக்கள் வெளியேறிய போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்து நசுங்கி இறந்தனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்ட 150 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாமியார் ஒருவர் நடத்திய சமய நிகழ்ச்சியில் 15ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உத்தரபிரதேச அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
மீட்புப் பணிகளில் உத்தரபிரதேச அரசுக்கு ஒன்றிய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

