13 பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பண்டார் பாரு கிள்ளான் தொகுதி வெ.130,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜூலை 4- பதிமூன்று பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு 130,000 வெள்ளியை பண்டார் பாரு கிள்ளான் தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆசிரியர்களும் மாணவர்களும் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை உகந்த சூழலில் மேற்கொள்வதற்கு உரிய வசதிகளை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 10,000 வெள்ளி வழங்கப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குவா பெங் ஃபெய் கூறினார்.

இந்த மானியத்தைப் பெறும் பள்ளிகளில் தேசிய தொடக்கப் பள்ளிகள், தேசிய இடைநிலைப் பள்ளிகள், தேசிய மாதிரி சீனப்பள்ளிகள் மற்றும் தேசிய மாதிரி தமிழ்ப்பள்ளி களும் அடங்கும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles