தேசிய ஊழியர் பாதுகாப்பு நிதி. இதன் முக்கியத்துவமும் அவசியமும் ஏன்? என்பதற்கான பொது விளக்கமும், மக்கள் சந்திப்பும்!

பினாங்கு, ஜூலை 2-
SOCSO எனப்படும் தேசிய ஊழியர் சேமிப்பு வாரிய அதிகாரிகள் மற்றும் பினாங்கு இந்து இயக்கத்துடனும், சிவ சாந்தா தர்ம மருத்துவ முகாமுடனும் இணைந்து ‘மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி’ ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந் நிகழ்ச்சியில் பொது மக்கள் தங்கள் உழைப்பின் ஒரு சிறு பகுதி வருமானத்தை ஏன் கட்டாயமாக சேமிக்க வேண்டும் மேலும் எவ்வாறு அச் சேமிப்பு நடைபெறுகிறது என்பதற்கான விளக்கமும் அதன் முக்கியத்துவமும் போன்ற விளக்கங்களைப் பெறலாம்.

‘சொக்சோ’ இலாகாவின் அதிகாரிகள் எல்லா வகையான கேள்விகளுக்கும் நேரடியாக விளக்கம் அளிப்பர். அதன் விபரம் வருமாறு –

இடம் – சிவசாந்தா தர்ம மருத்துவ முகாம்.

  1. ரீவர் ரோடு, (பினாங்கு ஜாலான் சுங்காய் தமிழ்ப் பள்ளி அருகில்)
    நாள் – 4 – 7 – 2024 வியாழக்கிழமை
    நேரம் – மாலை 6.30 மணி தொடங்கி இரவு 8 மணி வரை.

இந் நிகழ்ச்சிக்கு வர விரும்புவோர் கீழ்க் காணும் கைப் பேசி எண்னுடையவரிடம் மூன் கூட்டியே தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அழைக்க வேண்டியவர் –
திரு ப.முருகையா கைப்பேசி எண் –
016 4449246.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles