
கோலாலம்பூர் ஜூலை 3-
லெம்பா பந்தாய் ம இகா தொகுதி ஜாலான் கெமூஜா கிளைத் தலைவராக இருக்கும் மூத்த அரசியல்வாதி மற்றும் சமூக சேவையாளர் கே.டி. பாலா இம்முறை ம இகா மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் முக்கிய வேட்பாளர் ஆவார்.
1995 இல் இருந்து இன்று வரை கிளைத் தலைவராக இருந்து மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி உள்ளார்.
பத்து ஆண்டுகள் புக்கிட் பங்சார் கிளையின் இளைஞர் அணி தலைவராகவும் விலாயா மாநில இளைஞர் அணி நிர்வாக குழு உறுப்பினராகவும் இருந்து பணியாற்றி இருக்கிறார்.
கட்சிக்கும் இந்திய சமுதாயத்திற்கு ஆற்றிய அளப்பரிய சேவைகள் அடிப்படையில் இவர் மத்திய செலவைக்கு களம் இறங்கி இருக்கிறார்.
இந்திய சமுதாயம் கல்வி துறையில் சிறந்து விளங்கும் பொருட்டு பல தன்முனைப்பு மற்றும் கல்வி கருத்தரங்குகளை இலவசமாக நடத்தியுள்ளார்.
மாஜூ ஜெயா கூட்டுறவு கழகத்தின் இயக்குனராகவும் இவர் வலம் வருகிறார்.
கூட்டுறவு முதலீட்டு துறையில் இந்திய சமயத்திற்கு பல வகைகளில் வழிகாட்டியாக இருந்திருக்கிறார்.
கூட்டுறவு கழகங்களை அமைப்பதிலும் இவர் பலருக்கு உதவிக் கரம் நீட்டி உள்ளார்.
லெம்பா பந்தாய் தொகுதியில் 1997 இல் உதவித் தலைவராக வெற்றி பெற்று 2000 ஆம் ஆண்டு வரை சேவையாற்றினார்.
விலாயா மாநிலத்தில் 2014 முதல் 2016 நிர்வாக குழுவில் இடம் பெற்றார்.
ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் மேற்கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் பக்க பலமாக இருந்து ஆதரவு வழங்குவேன் என்று அவர் சொன்னார்.
கெடா கூடாரத்தில் மாவீரன் ராஜராஜ சோழனின் சிலையை திறந்து வைத்து மகுடம் சூட்டிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஒரு மிகச்சிறந்த அரசியல் தலைவர் ஆவார் என்று அவர் புகழாரம் சூட்டினார்.
அதேசமயம் துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் அரசியலில் மூதிர்ச்சி பெற்ற தலைவராக வலம் வருகிறார்.
இவர்களின் தலைமையில் இந்திய சமுதாயம் சிறந்து விளங்கும் என்று கே.டி. பாலா நம்பிக்கை தெரிவித்தார்.

