
புத்ராஜெயா, ஜூலை 3 – டெங்கிலில் உள்ள ஜாலான் கித்தா இம்பியான், சைபர்சவுத் என்ற இடத்தில் நேற்று போதைப்பொருளுக்கு அடிமையானவர் என சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் மூன்று கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று கைது செய்தனர்.
இருத்தொன்பது வயதுடைய அவ்வாடவர் ஓட்டிச் சென்ற பெரேடுவா பெஸ்ஸா காரை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்த கட்டளையிட்டதாகவும் ஆனால், அவர் காரை நிறுத்தாமல் வேகமாகச் சென்றதாகவும் சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமாருளா அஸ்ரான் வான் யுசுப் கூறினார்.
சந்தேக நபரின் காரை சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் போலீஸ் ரோந்து வாகனத்தில் துரத்திச் சென்ற போலீசார், இரவு 9.50 மணியளவில் அந்நபரைக் கைது செய்தனர்.

