7ஏ, 8ஏ ,9ஏ பெற்ற மாணவர்களுக்கும் மெட்ரிக்குலேசனில் பயில வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்! டாக்டர் சுரேந்திரன் வேண்டுகோள்

கோலாலம்பூர் ஜூலை 4-
எஸ்பிஎம் தேர்வில் 7ஏ, 8ஏ ,9ஏ பெற்ற மாணவர்களுக்கும் மெட்ரிக்குலேசனில் பயில இடம் வழங்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் டாக்டர் சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

10 ஏ பெற்ற அனைத்து இன மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷனில் பயில வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு ஒருபுறம் இருந்தாலும் சிறப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் கவனிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

7ஏ, 8ஏ ,9ஏ பெற்ற மாணவர்களும் இந்த கல்வி பயல வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை எங்களின் கோரிக்கையாகும்.

சிறப்பு தேர்ச்சி பெற்ற எந்த ஒரு மாணவரும் விடுபடக் கூடாது.
கடந்த காலங்களில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற இந்திய மாணவர்கள் புறக்கணிக்கப்பட்ட வரலாறுகள் உண்டு.

இனியும் இப்படி ஒரு கசப்பான சம்பவம் இடம்பெறக் கூடாது என்பதால் அரசாங்கமும் கல்வி அமைச்சும் இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அனைத்து இன மாணவர்களுக்கும் நீதியின் அடிப்படையில் முறையான கல்வி கிடைக்க வேண்டும்.

இதைதான் நாங்களும் காலம் காலமாக வலியுறுத்தி வருகிறோம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles